Friday, May 6, 2011
[LINK=/index.php?option=com_content&view=article&id=1832:2011-03-23-05-26-57&catid=38:2011-01-07-13-59-19&Itemid=399]குடி தண்ணீரை சுத்தமாக்க வாழைப்பழ
குடிநீரை சுத்தப்படுத்த இனி பியூரிபையர் தேவையில்லை. வாழைப்பழ தோல் போதும். ஆம், குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதன் விவரம்: இன்று குடிநீராக பயன்படும் தண்ணீர், காரீயம், செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் ரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு ரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன் நச்சுத் தன்மை உள்ளதாகவும் இருக்கின்றன. இந்நிலையில், தேங்காய் நார் மற்றும் கடலை தோல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சில்வர் பாத்திரங்கள் மற்றும் தோல் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழ தோலைக் கொண்டும் தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது, தண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால் போதும், அதில் உள்ள உலோக நச்சுப் பொருட்களை உடனடியாக தன்னகத்தே உறிஞ்சிக் கொள்ளும். எவ்வித ரசாயனப் பொருளையும் சேர்க்கத் தேவையில்லை.
தண்ணீரை சுத்தப்படுத்துவதில் மற்ற முறைகளைவிட இம்முறை சிறப்பானதாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழ தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
[LINK=/index.php?option=com_content&view=article&id=2497:2011-05-05-16-29-58&catid=38:2011-01-07-13-59-19&Itemid=399]கோழி கொழுப்பில் விமான எரிபொருள்!
லாஸ்ஏஞ்சல்ஸ் : பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை ஏறி வருகிறது. அதற்காக கார், பைக் ஓட்டாமல் இருக்க முடியுமா? எவ்வளவு விலை உயர்ந்தாலும் குறையாமல் நடக்கிறது விற்பனை. அதே நேரம்.. ‘பயன்பாட்டை குறையுங்கள், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது’ என்கிறார்கள் ஆர்வலர்கள். மாற்று எரிபொருள் குறித்த ஆய்வும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் விலங்குகளின் கொழுப்பில் இருந்து சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான விமான எரிபொருள் தயாரித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நாசா ட்ரைடன் விமான ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இதுதொடர்பாக தீவிர ஆய்வு நடத்தியது.
கோழி மற்றும் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பயோ எரிபொரு ளை விமானத்தில் பயன்படுத்தி சோதனை நடத்தியது. முதல் கட்ட சோதனையில் எரிபொருளின் தரம், இயந்திரங்களின் செயல்திறன், பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக எரிபொருளில் உள்ள நச்சுத்தன்மை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரோ கார்பன் சுற் றுச்சூழலில் மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் எரிபொருளில் இதன் அளவு குறித்த கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்த அளவு அதிகரிக்கும் போது எரிபொருள் பயன்பாட்டு அங்கீகாரம் நிராகரிக்கப்படும். இந்த ரசாயனங்கள் காற்றில் கலந்தால் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு, இதய பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக விமானங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடு உடனடி பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை தவிர்க்க ஆரம்ப கட்டத்திலேயே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்த பரிசோதனையிலும் கோழி எரிபொருள் வெற்றி பெற்றுள்ளது. இறுதிக்கட்டமாக நிறம், தரப் பரிசோதனைக்கு எரிபொருள் உட்படுத்தப்பட்டது. இதில் 90 சதவீதம் கார்பன் மாசுபாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சல்பேட், ஆர்கானிக் ஏரோசால், உள்ளிட்ட ஜெட் எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை திருப்திகரமாக பூர்த்தி செய்து உள்ளது. இறுதிகட்ட ஒப்புதலுக்கு பிறகு விரைவில் கோழி எரிபொருள் அறிமுகப்படுத்தப்ப டுகிறது.
Subscribe to:
Posts (Atom)