நலம் தரும் நவக்கிரக வழிபாடு :
நவக்கிரகங்கள் என்பது இறைத் தூதர்களாக கருதப்படுகின்றனர். அதாவது இறைவன் நினைத்ததை, அவரது உத்தரவை நிறைவேற்றும் ஊழியர்கள். நவகிரகங்களை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும்.
சூரியன்:
சூரியனுக்குரிய நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதமிருந்து வணங்க வேண்டும். இதனை ஆதிவிரதமென்றும் கூறுவார்கள். சூரியனுக்கு அதிபதி சிவன் என்பதால் சிவன் கோவில்களில் அர்ச்சனை செய்து வழிபடுவதோடு நவக்கிரக சன்னதியை வலம் வந்து சூரிய பகவானை நோக்கி வழிபட வேண்டும்.
"காசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகியெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை
நல்கும் வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய்
வந்த தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி"
என்று தோத்திரம் சொல்லி வணங்க வேண்டும். இவ்வாறு வணங்குவதால் உடற்பிணி கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்கும். ஜாதகத்தில் கிரக தோஷமுள்ளவர்களும் மற்றும் சூரிய திசை நடப்பவர்களும் ஞாயிறு விரதமிருத்தல் வேண்டும்.
செவ்வாய்:
செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய் திசை நடப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் குறைபாடுகள் நீங்கும். காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடுவதோடு நவக்கிரகத்தை வலம் வந்து செவ்வாய் கிரகத்தின் முன்னின்று வழிபட வேண்டும்.
``வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீளநிலம் தனில் அளிக்கும்
குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி''
என்று தோத்திரம் சொல்லி வணங்கினால் மேற்கூறியபடி தோஷநிவாரணம் ஏற்படுவதோடு அம்மனின் அருள் கிடைக்கும். ரத்த சம்பந்தமான நோய்களும் நீங்கும். வெற்றி கிட்டும். குறிப்பாக இந்த விரதத்தை அனுசரிக்கும் கன்னிப் பெண்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வழங்க வேண்டும்.
சனீஸ்வரன்:
அஷ்டமத்தில் சனி இருப்பவர்களும் ஏழாண்டுச்சனி இருப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்வதால் தொல்லைகள் குறைவதோடு நன்மை உண்டாகும். பெருமாளை வணங்கி நவக்கிரக சந்நிதியிலே நவக்கிரகங்களை வலம் வந்து சனீஸ்வரனுக்கு எள்ளை துணியிலே கட்டி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
"முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலினார்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்
சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே!"
என்று தோத்திரம் சொல்லி வணங்குதல் சகல துன்பங்களும் நீங்கப்பெற்று நீண்ட ஆயுள் கிட்டும். இந்த சனீஸ்வர விரதத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுசரிக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமாவது அனுசரிக்க வேண்டும்.
சுக்கிரன்:
இவ்விரதத்தை சுக்கிரவார விரதமென்றும் கூறுவார்கள். அம்பாளையும் முருகனையும் வணங்கி விரதம் அனுசரிக்கப்பட வேண்டும். சிலர் அவர்களது இஷ்டதெய்வங்களை வணங்கி மேற்கொள்வதுமுண்டு. நவக்கிரக சந்நிதியை வலம் வந்து சுக்கிர பகவானை வணங்க வேண்டும்.
அப்போது
"மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய்
வையம் காக்கவான் மழை பெய்விக்கும் கவிமகன் கனகம்
ஈவோன் தீர்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பம்
பார்க்கவன் சுக்கிரன் தன் பாத பங்கயங்கள் போற்றி! ''
என்ற தோத்திரத்தைப் பாடி வணங்குவதனால் புகழ், செல்வங்கள் பெருகுவதோடு பாவக்கிரகங்களின் பார்வையினால் பலமிழந்திருக்கக்கூடிய சுக்கிர பகவான் தொல்லைகள் நீங்கப் பெற்று நற்பலன்களை அளிப்பார்.
கேது பகவான்:
கேது விரதம் அனுசரிப்பவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விநாயகரை வணங்கி பின்னர் நவக்கிரக சந்நிதியை வழிபட்டு கேது பகவானை வணங்க வேண்டும்.
"பொன்னையின் னுரத்திற் கொண்டேன் புலவர்தம் பொருட்டால்
ஆழி, தன்னையே கடைந்து முன்னம் தண் அமுது அளிக்கல் உற்ற
பிள்ளை நின் கரவால் உண்ட பெட்பினிற் சிரம் பெற்றுயர்ந்தாய் என்னையாள் கேதுவே இவ்விருநிலம் போற்றத் தானே!"
என்று தோத்திரம் சொல்லி வணங்கி வர செல்வம், ஞானம், வெற்றி, புகழ் அனைத்தும் வந்து சேரும்.
சந்திரன்:
சந்திரதோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தை அனுசரித்தால் தோஷம் நீங்கப் பெறுவார்கள். சிவன் கோவில்களில் நவக்கிரகங்களை வணங்கி சந்திர பகவான் முன் நின்று வழிபட வேண்டும்.
"அலைகடல் அதனில் நின்றும் அன்று வந்துதித்த போது
கலைவளா திங்களாகிக் கடவுளென் றெவரும் ஏத்தும்
சிலை முதல் உமையாள பங்கன் செஞ்சடைப் பிறையாருமேரு
மலைவல மாதவந்த மதியமே போற்றி போற்றி''
என்று தோத்திரம் சொல்லி வணங்குபவர்கள் ஆயுள் விருத்தியும் சகல செல்வ போகங்களும் பெறுவார்கள்.
புதன்:
புதன் விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும் என்பதால் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் அனைவரும் அனுசரிக்கலாம். புதன்கிழமை அன்று நாராயணனை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி புதன் பகவான் முன் வழிபட வேண்டும்.
"மதனநூல் முதல் நான்கு மறைபுகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன்
திங்கள் சுதன்பசு பாக்கியம் சுகம்வபல் கொடுக்க வல்லான்
புதன் கவி புலவன் சீர்மால் பொன்னடி போற்றி போற்றி''
என்று தோத்திரம் பாடி வணங்குவதால் சகல சிறப்புகளும் பொருந்தி வரும் என்று கூறப்படுகிறது.
குரு:
குரு தோஷமுள்ளவர்கள் மட்டுமின்றி ஏழ்மையில் இருப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குடும்பத்தைப் பிரிந்தவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் அனைவரும் இந்த விரதத்தை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். நவக்கிரகங்களை வலம் வந்து வியாழ பகவானை நோக்கி வழிபட வேண்டும்.
"மறைமிகு கலைநூல் வல்லோன் வானவாக் கரசன்
மந்திரி நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக் கதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இரமலாப்பாதம் போற்றி''
என்னும் தோத்திரம் பாடி வணங்க வேண்டும். இவ்வாறு விரதத்தை மேற்கொள்வதன் பலனாக நல்வாழ்க்கை, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ராகு பகவான்:
ராகு தோஷமுள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இவ்விரதத்தை அனுசரிக்கலாம். காளி கோவிலுக்குச் சென்று வேப்பெண்ணெய் விளக்கேற்றி நவக்கிரக சந்நிதியில் ராகு பகவானை வழிபட வேண்டும்.
"வாகுசேர் நெடுமான் முன்னம் வானவருக்கு அமுதம்
ஈயப்போகும் அக்காலை உன்றன் புணர்ப்பினால் சிரமே
அற்றுப்பாகுசேர் மொழியன் பங்கன் பரன் கையில் மீண்டும்
பெற்ற ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!''
என்ற தோத்திரம் பாடி வணங்குவதால் சகல நோய்களும் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.
நன்றி : மாலைமலர் - ஆன்மிகம்
Monday, October 24, 2011
ஒரு ஆசிரியை மனது வைத்தால்...
ஒரு ஆசிரியை மனது வைத்தால்...
மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி!
தொடக்கக்கல்வி ஆசிரியர்களான எங்களுக்கு, ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் 'பிள்ளையார் சுழி!' போட்டுவிட்ட திருப்தி வாழ்க்கை முழுவதும் இருக்கும். எங்களோட மாணவர்கள் எல்லாம் எதிர்காலத்துல பெரிய ஆட்களா வரும்போது, அவங்க ஏணியோட முதல் படியா நாங்க இருந்தோம்ங்கற சந்தோஷம், ரொம்ப அற்புதமானது இல்லையா?!"
வார்த்தைகள் மிக அழகாகவும், கம்பீரமாகவும் ஒலிக்கின்றன சரஸ்வதியிடமிருந்து!
திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மானூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதி தான் இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த ஐந்தே வருடங்களில், மாவட்டத்தின் 'சிறந்த தொடக்கப்பள்ளி'யாக தனது பள்ளியைத் தரம் உயர்த்தியவர். அதற்கு அங்கீகாரமாக, பழனி கல்வி மாவட்டத்தின் தொடக்கல்வித் துறை, மாவட்டத்தின் '2010-11 கல்வியாண்டின் சிறந்த தொடக்கப்பள்ளி'க்கான அரசு விருதுக்காக பரிந்துரைத்துள்ளது. கூடவே, மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும், தங்களின் பயிற்சி பட்டறைக்காக இந்தப் பள்ளியையே நாடுகின்றன.
'ஏய் வாத்திம்மா... எங்களையே அடிக்க வர்றியா...' என்று குருவுக்கான மரியாதையைக்கூட கொடுக்கத் தெரியாத முரட்டு கிராமப்புற மாணவர்கள்... சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சமூக விரோத கூடாரமாகிப் போகும் பள்ளி... 'இந்த ஸ்கூலெல்லாம் லாயக்கில்ல... இங்கிலீசு மீடியத்துக்கு அனுப்புவோம்...' என்ற பெற்றோர்களின் மனநிலை... இத்தகைய சூழலில் இங்கே பொறுப்பேற்ற சரஸ்வதி, அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
"என்னோட பணிபுரியற ஆசிரியைகளும், ஆசிரியரும் இணைந்து செயல்பட்டதுக்கான பலன் இது!" என்று எல்லோருக்குமான அங்கீகாரத்தோடு ஆரம்பித்த சரஸ்வதி,
"2005-ம் வருஷம் இங்கே வந்தேன். விடுமுறை தினங்கள்ல வகுப்பறைகளை சமூகவிரோதிகள் பயன்படுத்திக்கிட்டிருந்தாங்க. பொருட்களும் திருட்டுப் போயிக்கிட்டிருந்தது. ஆசிரியர்கள், ஊர் மக்கள், பஞ்சாயத்து தலைவர்னு எல்லாரும் ஒண்ணு சேர்ந்து அதை எல்லாம் சரி செஞ்சோம்.
அடுத்ததா, மாணவர்கள் பக்கம் கவனத்தை திருப்பினோம். 'டிரெஸ்'கூட சரியா போட்டுட்டு வராத நிலைமையில இருந்தவங்ககிட்ட, பள்ளி பத்தின மரியாதையான, ஆர்வமான பிம்பத்தை ஏற்படுத்தினோம். 'நல்லா படிக்கணும், ஆசிரியர்களை மதிக்கணும்'ங்கற அடிப்படை புரிதலை அவங்களுக்கு ஏற்படுத்தவே ரொம்ப மெனக்கெட வேண்டி இருந்தது.
அடுத்த கட்டமா, யூனிஃபார்ம் கலர், டிசைன் இதையெல்லாம் கல்வித்துறை ஒப்புதலோடு மாத்தினோம். ஒரு கட்டத்துல, மாணவர்கள் எங்க வட்டத்துக்குள்ள வந்தாங்க, வளர்ந்தாங்க. இப்போ அதுக்கான பலனை மனதார உணர்றோம்" என்று பூரித்த சரஸ்வதி, பள்ளியின் செயல்வழிக் கற்றல் (ஏ.பி.எல்) முறை வகுப்புகளுக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
ஒவ்வொரு வகுப்புக்கும் வெளியேயும் மாணவர்கள் வரிசைப்படுத்தி அடுக்கியிருந்த ஸ்கூல் பேக்குகளும், காலணிகளும் அவ்வளவு நேர்த்தி! பள்ளி வளாகத்தில் எங்குமே குப்பைகளைக் காணமுடியவில்லை. எல்லாவற்றையும்விட ஹைலைட்... பள்ளியில் அவர்கள் நடத்தும் 'மாதிரி அமைச்சரவை'!
"எங்க பள்ளியில ஒவ்வொரு ஆசிரியையும் ஒவ்வொரு துறைக்கு 'அமைச்சரா' பொறுப்பேற்று வேலைகளைப் பகிர்ந்துக்கறோம். துறை சார்ந்த விஷயங்களை மாணவர்களோட மனசுலயும் பசுமரத்தாணி போல பதிய வைக்கிறோம்" என்றபடியே, "சுகாதாரத்துறை 'அமைச்சர்' ரேணுகா, சுகாதாரத்துறை 'இணை அமைச்சர்' சுகன்யாதேவி, வெளியுறவுத்துறை மற்றும் மின்துறை 'அமைச்சர்' கதிரவன், உணவுத்துறை 'அமைச்சர்' விஜயராணி, நீர்வளத்துறை 'அமைச்சர்' ரஸியா பேகம், விளையாட்டு மற்றும் நூலகத் துறை 'அமைச்சர்' சுமதி, பாதுகாப்புத்துறை 'அமைச்சர்' சாரதா, தோட்டக் கலைத் துறை 'அமைச்சர்' ஈஸ்வரி" என்று 'அமைச்சர்'களை நமக்கு அறிமுகப்படுத்தினார் சரஸ்வதி.
அவரைத் தொடர்ந்த சுகாதாரத்துறை 'இணை அமைச்சர்' சுகன்யாதேவி, "தர்மபுரி மாவட்டம், பெண்ணாகரம் யூனியன்ல இருக்கற மலை கிராமமான மழையூர்ல ஈராசிரியர் பள்ளியில வேலை பார்த்தவ நான். அதனால பின் தங்கின கிராமத்துப் பள்ளிகளோட நிலைமை எனக்கு ஏற்கெனவே பரிச்சயம். 'இதை எல்லாம் எப்படி சரிசெய்யப் போறோம்?'ங்கற மலைப்பு இல்லாம, முழு மனசோட அதுக்கான வேலைகள்ல என்னையும் இணைச்சுக்கிட்டேன்.
தமிழ் எழுத்துக்களையே சரியா எழுத தெரியாத நிலையில இருந்த பிள்ளைங்க, இன்னிக்கு ஆங்கில அறிவுலயும் சிறந்து விளங்கறதப் பார்க்கும்போது, ரொம்ப பெருமையா இருக்கு. எங்க ஹெச்.எம். வேலை நாட்கள்ல தினமும் மதியம் 1 - 2 மணி மற்றும், மாலை 4.30 - 5.30 மணிக்கு 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புகளை எடுக்கறாங்க. அதனால்தான் ஒரு 'மெட்ரிக்' பள்ளியோட தரத்தை எங்க பள்ளியில் கொண்டுவர முடிஞ்சுது!" என்று பெருமையோடு சொன்னார்.
இங்கே படிக்கும் மாணவர்களின் படிப்பு நின்று போவதற்கு, பொருளாதாரம் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக அக்கறையோடு பல ஏற்பாடுகளை செய்திருக்கிறார் சரஸ்வதி. அதில் ஒன்று... வசதி, வாய்ப்புகளோடு இருக்கும் பழைய மாணவர்களை சேர்த்துக் கொண்டது. அந்த வகையில் இன்றைய மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு, புத்தகங்கள் வழங்கி வருகிறார் பழைய மாணவர் செந்தில்.
"இருபது வருஷத்துக்கு முன்ன இந்த ஸ்கூல்ல படிச்சேன். அன்னிக்கு ஸ்கூலோட நிலைமை ரொம்பவே மோசம். இப்போ ஆசிரியர்களால அங்க மிகப் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கு. அந்த சந்தோஷத்துல நானும் பங்கெடுத்துக்க என்னால ஆன பொருளாதார உதவிகளைச் செய்றேன்..." என்றார் செந்தில் அடக்கமான வார்த்தைகளில்.
மெட்ரிக்குலேஷன் பள்ளியிலிருந்து இடம் மாறி இங்கே சேர்ந்திருப்பவர்களில் ஒருவர் சாராதஸ்ரீன். அவருடைய தந்தை சம்சுதீன் நம்மிடம், "எங்க பூர்வீகமே இந்த ஊர்தான். பத்து பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன இருந்ததைவிட இப்ப இந்த ஸ்கூல் நல்லாயிருக்கு. அதனாலதான் 'மெட்ரிக்' ஸ்கூல்ல படிச்சுட்டிருந்த எம்பொண்ண, இந்த ஸ்கூல்ல சேர்த்தோம்" என்று சொன்னார்.
மொத்தம் 345 மாணவ, மாணவியர் இங்கே படிக்கிறார்கள். "எங்க ஸ்கூல் சூப்பர் ஸ்கூல்தானே!" என்று அவர்கள் கேட்பதைப் போலவே... தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளி மாணவர்களும் கேட்க முடியாதா என்ன? என்ன, கூட்டணி பலமாக இருக்கவேண்டும்... மானூர் ஆசிரியர் கூட்டணியைப் போல.
தமிழ் தாயகத்திற்காக
நீலாம்பரி

Scientists found water like that found in the Earth's oceans on a comet.
Scientists have, for the first time, found water like that found in the Earth's oceans on a comet.
The new evidence strongly suggests that a significant portion of the Earth's seawater arrived
as a result of collisions with ice-packed comets.
Astronomers at the University of Michigan found the comet Hartley 2
carries ice with the same chemical composition as our oceans.
"We were all surprised," said Professor Ted Bergin.
"Life would not exist on Earth without liquid water, so the questions of how
and when the oceans got here is a fundamental one (sic)," he said.
"It's a big puzzle and these new findings are an important piece."
The scientists made the discovery with infrared instruments on the Hershel Space Observatory ,
a telescope which orbits 930,000 miles away from Earth.
They measured the ratio of hydrogen and deuterium - or heavy hydrogen - in the frozen water,
and found it was the same as in seawater.
Six other comets analysed by the observatory in recent years carried ice with
different chemical compositions.
As a result scientists concluded that comets could not have contributed more than
10% of the world's water.
But Hartley 2 was born in a different part of the solar system to the other six comets tested.
"The results show that the amount of material out there that could have contributed to
Earth's oceans is perhaps larger than we thought," said Professor Bergin.
The research is published in the science journal Nature.
A close-up view of the comet Hartley 2

Subscribe to:
Posts (Atom)