Thursday, March 3, 2011

Remember to Sleep -- Sleep to Remember.


Scientists have found that sleep helps consolidate memories, fixing them in the brain so we can retrieve them later. Now, new research from the University of Notre Dame and Boston College shows that sleep also seems to reorganize memories, picking out the emotional details and reconfiguring the memories to help you produce new and creative ideas.

Credit: NSF/Karson Productions
Remember to Sleep -- Sleep to Remember.

I'm Bob Karson with the discovery files -- new advances in science and engineering from the National Science Foundation.

(Sound effect: snoring) When you're asleep, your brain is very active. Looking at research out of Notre Dame and Boston College, sleepy time is when your brain, among other things, is analyzing, organizing, and reconfiguring memories, so you can retrieve them later. The project showed regions of the brain most active during sleep included emotion and memory consolidation. They found that your brain is giving each memory a once-over, and filing it in such a way as to make the memory stronger.

The team believes that as your brain processes memories, it hangs on to the most emotional parts and gets rid of some of the less useful fine detail. The researchers say a good night's sleep (eight hours in most cases) can also enhance creativity, because your brain has distilled the memories down to the most salient and useful information. It's sort of like when you de-frag a computer, it can accomplish new tasks more efficiently.

It takes time for the brain to accomplish this. You may think you can cheat the sandman but without enough sleep, your brain may not have finished its work. The researchers say even a relatively small amount of sleep deprivation could profoundly affect your cognitive abilities.

So sleep well tonight -- think better tomorrow. (Sound effect: yarning) I think I need a power nap.

"The Discovery Files" covers projects funded by the government's National Science Foundation. Federally sponsored research -- brought to you, by you! Learn more at nsf.gov or on our podcast.

Tuesday, March 1, 2011

கூகுளில் வேலை செய்ய விருப்பமா?

கூகுளில் வேலை செய்ய விருப்பமா?

கூகுள் நிறுவனச் சரித்திரத்தில், இந்த 2011 ஆம் ஆண்டில், மிக அதிகமான எண்ணிக்கையில் திறமையானவர்களை வேலைக்கு எடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக, இந் நிறுவனத்தின், பொறியியல் மற்றும் ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் ஆலன் எஸ்டிஸ், தன்னுடைய வலைமனைப் பக்கத்தில் (http://googleblog.blogspot.com/2011/01/helpwantedgooglehiringin2011.HTML) அறிவித்துள்ளார்.

இந்த ஆள் தேடல், பன்னாட்டளவில் நடைபெற இருக்கிறது. பேஸ்புக், ட்விட்டர், ஸிங்கா மற்றும் குரூப் ஆன் போன்ற நிறுவனங்கள், கூகுள் நிறுவனத்திற்குப் போட்டியாக, தங்களைத் தயார் செய்து கொண்டிருப் பதால், அவற்றிற்குச் சரியான பதிலடி தர, கூகுள் தன்னைத் தயார் செய்திடும் முயற்சியே, இந்த புதிய ஆட்களை அதிக எண்ணிக்கையில் எடுக்கும் முடிவாகும்.

சென்ற 2010 ஆம் ஆண்டு வரை, கூகுள் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களின் எண்ணிக்கை 24,000 ஆக இருந்தது.

4ஜி அலைவரிசை

லாஸ்வேகாஸ் தகவல் தொழில் நுட்ப திருவிழாவில் கலந்து கொண்ட நிறுவனங்கள் அனைத்தும், வரும் ஆண்டுகளில் தாங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் டிஜிட்டல் சாதனங்கள், சேவைகள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்தியுள்ளன.

இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. ஏறத்தாழ அனைத்து நிறுவனங்களும் ஏதாவது ஒரு வகையில் பேசியது 4ஜி அலைவரிசை தொடர்பு குறித்துத் தான்.

பல நிறுவனங்கள் 4ஜி அலைவரிசை தொடர்புடன் கூடிய மொபைல் போன் அல்லது டேப்ளட் பிசியைக் காட்சிக்குக் கொண்டு வந்திருந்தனர். 4ஜி அலைவரிசை கொண்ட மொபைல் போன்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தொலைதொடர்பு வேகத்தைத் தரும்.

ட்ரெயினில் பயணிக்கும் போது கூட விநாடிக்கு 100 மெகாபிட் அளவில் இணைய இணைப்பு பெற முடியும். மிகக் குறைந்த வேக இணைப்பு கூட விநாடிக்கு ஒரு கிகா பிட் வேகத்தில் இருக்கும்.

அறிமுகப்படுத்தப்பட்ட சாதனங்களில், ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் பிளே புக் டேப்ளட் பிசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஐ-பேட் சாதனத்தைக் காட்டிலும் 400 கிராம் குறைவான எடையில், 7 அங்குல அகலத் திரையுடன் இயங்கியது.

இதே போலக் கவனத்தை ஈர்த்த இன்னொரு சாதனம் டெல் ஸ்ட்ரீக் 7 (Dell Streak 7) டேப்ளட் பிசி. டெல் நிறுவனத்தின் 4ஜி திறன் கொண்ட முதல் டேப்ளட் பிசி இதுதான். ஆண்ட்ராய்ட் சிஸ்டம் 2.2 இயக்கத்தில் செயல்படுகிறது.

இதில் உள்ள கொரில்லா கிளாஸ் டச் ஸ்கிரீன் திரை, வேறு எதனையும் பக்கத்தில் கூட ஒப்பிட விடுவதில்லை. இந்தியாவில் 2ஜி வரலாற்றினையும், 3ஜி முழுமையாக உண்டா என்று அறியாத நிலையையும் பார்த்துக் கொண்டிருந்தாலும், தடைகள் நீங்கி 4ஜி சாதனங்களைப் பயன்படுத்தும் வகையில் சேவை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

2. முப்பரிமாண டிவி: பலரின் கண்கள் அதிகம் மொய்த்த அடுத்த சாதனம் முப்பரிமாண "டிவி'. இதனை கண்ணுக்கு ஸ்பெஷல் கண்ணாடி போட்டு பார்க்க வேண்டியதில்லை. சோனி நிறுவனம் இத்தகைய ஒரு "டிவி'யினைக் காட்டியது. இவற்றுடன் 27 புதிய எச்.டி.டி.வி. (HDTV) மாடல்களும் காட்டப்பட்டன.

இவற்றில் 16 "டிவி'க்கள், முப்பரிமாண படத்தைக் காட்டக் கூடியன. ஐஸ்டேஷன் (iStation) என்னும் நிறுவனம் ஸூட் (Zood) என்னும் டேப்ளட் பிசியைக் காட்டியது. முப்பரிமாணக் காட்சியைக் காட்டும் திரை இதன் சிறப்பாகும். அது மட்டுமின்றி 2டி யிலிருந்து 3டிக்கு (2D to 3D) மாற்றும் தொழில் நுட்பத்தினையும் இது கொண்டுள்ளது.

சில "டிவி'க்கள் நமக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைத் தருவதாகவும் இருந்தன. தற்போது வேகமாகப் பரவி வரும் திரைகள் மூலம் டிவிக்களை மிக மிக ஸ்லிம்மாக வடிவமைப்பது எளிதாகிறது.

இந்த வகையில் எல்.ஜி. நிறுவனம் 2.9 மிமீ மட்டுமே தடிமன் கொண்ட "டிவி' ஒன்றை அறிமுகப் படுத்தியது. இதே போன்ற வேறு பல "டிவி'க்களும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. சாம்சங் நிறுவனம் ப்ளாஸ்மா "டிவி' திரை கொண்ட 16 "டிவி'க்களை அறிமுகப்படுத்தியது. இவற்றின் ரெசல்யூசன் என்ற அளவில் இருப்பது ஒரு சிறப்பாகும்.

"டிவி'க்களின் தடிமன் சிறிய அளவில் குறையும் போது, திரையின் அகலம் அதிகமாகி வருவது வழக்கமாகி வருகிறது. எல்.ஜி. மற்றும் ஷார்ப் நிறுவனங்கள் 72 அங்குல எல்.இ.டி. திரை கொண்ட "டிவி'க்களில் பல மாடல்களை அறிமுகப் படுத்தியுள்ளன. இவற்றில் பல முப்பரிமாண காட்சிகளைக் காட்டும் "டிவி'க்களாகும்.