300 ரூபாய் புடவைக்கு 3000 ரூபாய் பிளவ்ஸ்!
ந.ஜீவாFirst Published : 27 May 2012 12:00:00 AM IST
என்னை நரகத்துக்குப் போகச் சொன்னாலும் போவேன். பெண்களுக்குத் துணையாக துணிக்கடைக்கு மட்டும் போக மாட்டேன்'' என்று சொல்பவரா நீங்கள்? கவலைப்படாதீர்கள். நீங்கள் தனியாள் அல்ல. கோடிக்கணக்கான ஆண்கள் உங்களைப் போல இப்படி புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்படியென்ன பெண்களுக்கு இப்படி ஆடைகளின் மேல் மோகம்? விதவிதமான வடிவமைப்புகளில் மலைமலையாக ஆடைகளைக் குவித்துப் போட்டாலும், அதில் ஒன்றைக் கூடத் தேர்ந்தெடுக்காமல் அடுத்த கடையை நோக்கி இப்படி அவர்கள் படையெடுப்பது எதற்காக? அவர்களுடைய மனதுக்குப் பிடித்த ஆடைகள் இல்லாமல்தான் இப்படி கடைகடையாக ஏறி இறங்குகிறார்கள்.
ஆனால் சில பெண்கள் இப்படி அலைவதில்லை. ""நான் பத்தாயிரம் ரூபாயில் ஒரு புடவை எடுத்திருக்கிறேன். இதற்குப் பொருத்தமான பிளவுஸýக்கு என்ன செலவானாலும் பரவாயில்லை. வடிவமைத்துக் கொடுங்கள்'' என்று சென்னை அடையாறு
கஸ்தூரிபாய் நகரில் உள்ள ஆடை வடிவமைப்பாளர் கீதா விஸ்வநாதனை அணுகுகிறார்கள். மிக எளிமையாக நூறு ரூபாய் செலவில் ஒரு பிளவுûஸ வடிவமைத்துக் கொடுத்துவிடுகிறார், அவர். இன்னொரு பெண், ""என்னிடம் 300 ரூபாய் புடவை ஒன்று இருக்கிறது. அதைக் கட்டிக் கொண்டு நான் ஒரு திருமணத்துக்குப் போக வேண்டும். அங்கே நான் ரிச்சாகத் தெரிய வேண்டும். ஒரு பிளவுஸ் வேண்டும் '' என்று கேட்டால் அவருக்கு ரூ.3000 செலவில் ஒரு பிளவுûஸ வடிவமைத்துக் கொடுக்கிறார்.
""இப்படித் தனிப்பட்ட ஒருவரின் விருப்பத்துக்கு, தேவைக்கு ஏற்ப அவர்களுடைய உடல் வாகுக்குப் பொருத்தமான ஆடைகளை நான் 1985 முதல் வடிவமைத்துக் கொடுத்து வருகிறேன். உலகம் முழுவதும் 60 நாடுகளில் உள்ள பெண்கள் என்னிடம் தொடர்பு கொண்டு அவர்களுடைய ஆடைகளுக்கான ஆலோசனைகளைப் பெறுகிறார்கள்'' என்கிறார் கீதா விஸ்வநாதன்.
சென்னை அடையாறில் "சிப்ட் கம்யூனிட்டி காலேஜ்' என்கிற பெயரில் ஆடை வடிவமைப்புத் துறையில் பல படிப்புகளைச் சொல்லித் தருகிறார் அவர். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் கீழ் பி.எஸ்ஸி ஃபேஷன் டிசைனிங் படிப்பும், ஓராண்டு, ஒன்றரையாண்டு டிப்ளமோ படிப்புகளும் சொல்லித் தருகிறார். அதுமட்டுமல்ல, பேஷன் டிசைனிங் தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களும் எழுதியிருக்கிறார்.
""ஒரு பெண் தனக்குப் பொருத்தமான ஆடைகளைத் தைக்க, தையற்காரரிடம் போனால் தையற்காரர் அவருடைய மனதில் தோன்றியதைச் சொல்வார். அதை அந்தப் பெண் வேறுவழியின்றி ஏற்றுக் கொள்வார். ஆனால் நாங்கள் ஒரு பெண்ணுக்குத் தேவையான ஆடைகளை அவர்களுடைய விருப்பத்துக்கேற்ப வடிவமைத்துத் தருகிறோம். எங்களைத் தேடி டாக்டர்கள், ஸôப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிபவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியைகள் எனப் பலரும் வருகின்றனர். அவர்களுடைய தொழிலுக்கேற்ற நல்ல மரியாதையான தோற்றத்தோடு அவர்கள் காட்சியளிக்க வேண்டும். இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு, நாங்கள் அவர்களுக்கு ஆடைகளை வடிவமைத்துக் கொடுக்கிறோம்'' என்கிறார்.
கீதா விஸ்வநாதன் நடத்தும் கல்லூரியில் படிக்க பல இல்லத்தரசிகளும் வருகிறார்கள். அவர்கள் பட்டப் படிப்போ, டிப்ளமோ படிப்போ படிக்க வருவதில்லை. அவர்களுக்குத் தேவையான ஒரு சிலவற்றை மட்டும் தெரிந்து கொள்ள வருகிறார்கள்.
""சில பெண்கள் எனக்குப் புடவையில் எம்பிராய்டரி போடத் தெரியவில்லை. அதை மற்றும் கற்றுத் தாருங்கள் என்று வருவார்கள். சிலர் புடவையில் பிரிண்டிங் போடக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வருவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மூன்று நாள் பயிற்சி பட்டறைகளை நடத்துகிறோம். ஒரு சல்வார் கமீஸ், ஒரு பிளவுஸ் மட்டும் தைக்கக் கற்றுத் தருகிறோம். அல்லது பிளவ்ஸ் மட்டும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும் அதை மட்டும் தைக்கக் கற்றுக் கொடுக்கிறோம். இதனால் இல்லத்தரசிகள் பலர் எங்களிடம் பயிற்சி பெற்று அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களுக்கு ஆடைகளைத் தைத்துக் கொடுத்து வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம் ஈட்டுகிறார்கள்.
சிலர் கம்ப்யூட்டர் டிசைனிங் கற்றுக் கொள்ள ஆசைப்படுவார்கள். கற்றுக் கொண்ட பின்பு அவர்களுக்குத் தெரிந்த நிறுவனங்களில் ஆர்டர் பெற்றுச் செய்து தருவார்கள். இதனால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிட்டும் வாய்ப்புகள் உள்ளன.
பேஷன் டிசைனிங்கில் ஒரு மாத கோர்ஸýம் உள்ளது. கட்டிங்கும், ஸ்டிட்சிங்கும் எல்லாருக்கும் பொது. கம்ப்யூட்டர் ஃபேஷன் டிசைனிங், கையில் எம்பிராய்டரி போடுதல் - அதிலேயே 100 வகைகள் உள்ளன } ஃபேப்ரிக் பிரிண்டிங், கலம்காரி பெயிண்டிங், விதவிதமான சல்வார் கமீஸ்கள் தைத்தல் என முப்பதுக்கும் மேற்பட்ட கலைகளைக் கற்றுக் கொடுக்கிறோம்'' என்கிறார் பெருமையாக.
இல்லத்தரசிகளுக்கு மட்டும் அல்லாமல்,ஃபேஷன் டிசைனிங்கில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பும் சொல்லித் தருகிறார்கள். ஒவ்வோராண்டும் ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில் ரெகுலர் கோர்ஸýகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பிற படிப்புகளை எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம்.
""எங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு 100 சதவீத வேலை வாய்ப்பு நிச்சயம். படிக்கும்போதே அவர்கள் நடைமுறையில் அந்தத் தொழிலைச் செய்வதற்கான திறமைகளையும், தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். மேலும் "ரஉஅயஉத'ந நஉதயஐஇஉ இஉசபஉத'- உடன் இணைந்து செயல்படுகிறோம். இதனால் எங்களுடைய மாணவர்கள் டிசைனிங், நெசவு, துணிகளில் பிரிண்ட் செய்வது, சாயம் தோய்ப்பது போன்றவற்றில் உள்ள பல புதிய இயந்திரங்கள், வழிமுறைகள் ஆகியவற்றிலும் நன்கு தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். மேலும் இத்துறையில் புகழ்பெற்ற நிபுணர்கள், அரசின் உயர் அதிகாரிகளை அழைத்து வந்து "நேருக்கு நேர்' நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நடத்துகிறோம். இதனால் எங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு இத்துறை சார்ந்தவர்களின் நேரடித் தொடர்பு கிடைத்துவிடுகிறது. படித்து முடித்த பின்பு சொந்தத் தொழில் செய்வதற்கோ, அல்லது வேலைக்குப் போவதற்கோ இது உதவுகிறது'' என்கிறார் பெருமையாக.
கீதா விஸ்வநாதனுக்கு நிறைய விருதுகள் கிடைத்து இருக்கின்றன. "தமிழ்நாட்டின் சிறந்த பெண் தொழில் முனைவோர்' விருது 1995 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவிடம் பெற்றதைப் பெருமையாகச் சொல்கிறார் அவர்.
தேச வளர்ச்சிக்காகச் சிறப்பாகச் சேவை செய்தார் என்பதற்காக இந்திய அளவில் "சிக்ஷா பாரதி புரஸ்கார்' விருதும் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, லண்டனில் உள்ள மார்க்ஸ் & ஸ்பென்சர்ஸ் நிறுவனத்தின் "பெஸ்ட் பிரைடல் வேர் டிசைனர்' விருதும் கிடைத்திருக்கிறது. என்றாலும் தனது துறையில் புதுமையான பலவற்றைப் புகுத்துவதிலும், அவற்றைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார் கீதா விஸ்வநாதன்.
""சால்ட் பிரிண்டிங் முறை என்ற ஒன்றை நாங்கள் இப்போது கற்றுக் கொடுக்கிறோம். இந்த முறையில் செய்யப்படும் பிரிண்டிங்கால் ஷோடோ எஃபெக்ட் கிடைக்கிறது. பட்டுத் துணி போன்ற பளபளப்பான துணிகளில் இந்த முறையில் பிரிண்ட் செய்யலாம். இதற்கான முதலீடு மிகவும் குறைவு'' என்கிறார் அவர்.
Email PrintDelicious Digg Facebook Twitter கருத்துகள்உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
இ-மெயில் * சரியான மின்னஞ்சலைக் கொடுக்கவும் சரியான மின்னஞ்சலைக் கொடுக்கவும் பெயர் * கீழே தெரியும் கட்டத்தில் சரிபார்ப்பு வார்த்தையை உள்ளிடவும் *
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.