Thursday, May 13, 2010
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
28 வருடங்களுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கும் கௌபாய் படம். ஆஹா என்று கொண்டாடவும் முடியாத, அடச்சே என்று ஒதுக்கவும் முடியாத மிடில் கிளாஸை சேர்ந்தவன் சிம்புதேவனின் இந்த கௌபாய்.
ஹீரோவோட ஊர் ஜெய்சங்கர்புரம். இந்த ஜெய்சங்கர் வேறு யாருமில்லை, நடிகர் ஜெய்சங்கரேதான். நிறைய கௌபாய் படங்களில் நடித்தவர் என்பதால் ஊருக்கு நடுவில் ஒரு சிலையும் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு வில்லன் இரும்புக்கோட்டையை ஆளும் கிழக்குக்கட்டை. ஹாலிவுட்டில் கௌபாய் படங்களில் தூள் கிளப்பிய கிளிண்ட் ‘ஈஸ்ட்வுட்’டின் தமிழ்ப்படுத்துதல்தான் கிழக்குக்கட்டை. வில்லன் அல்லவா? வில்லாதி வில்லன் நமது அசோகனின் சிலையை கிழக்குக் கோட்டையில் நிறுவியிருக்கிறார்கள்.
ஹீரோவுக்கும், வில்லனுக்கும் இப்படி தமிழ் சினிமாவை வைத்தே ஒரு பேக்ராப்பை உருவாக்கியிருக்கும் சிம்புதேவனின் கற்பனைக்கு ஒரு கைகுலுக்கல். கதையும் பெரிதாக பழுதில்லை.
கிழக்குக்கட்டையின் அக்கிரமங்களை எதிர்க்கும் ஜெய்சங்கர்புரத்து சிங்கம்தான் (லாரன்ஸ்) ஹீரோ. ஒரு சண்டையில் தப்பாட்டம் ஆடி சிங்கத்தை சின்னாபின்னமாக்கிவிடுகிறான் கிழக்குக்கட்டை (நாசர்). தலைவன் இல்லாமல் தவிக்கும் ஜெய்சங்கர்புரத்தைச் சேர்ந்த நாலு பேர் தோற்றத்தில் சிங்கம் போலவே இருக்கும் ஷோலேபுரத்து சிங்காரத்தை கடத்தி வந்து சிங்கம் போலவே உலவ விடுகிறார்கள். இது கிழக்குக்கட்டையின் ஆட்களுக்கு கிலியை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் கிழக்குக்கட்டை தேடிக் கொண்டிருக்கும் புதையல் இருக்கும் மேப் ஜெய்சங்கர்புரத்துக்காரர்கள் கையில் கிடைக்கிறது. மேப்பை தருகிறோம், எங்களை நிம்மதியாக இருக்கவிடு என்கிறார்கள் ஜெய்சங்கர்புரத்து மக்கள். ஆனால் கிழக்குக்கட்டை புதையலையும் நீங்கதான் எடுத்துத்தர வேண்டும் என்கிறான். சிங்கம் அண்ட் கோ புதையலை எடுத்தார்களா? கிழக்குக்கட்டையின் கொட்டம் அடங்கியதா? கிளைமாக்ஸ்.
உலகில் கௌபாய்கள் எங்கு தோன்றினார்கள், எங்கெல்லாம் வாழ்கிறார்கள் என்று சின்சியராக படத்தை ஆரம்பிக்கும் போது அட ஒரு வித்தியாசமான படம் என்று நிமிர்ந்து உட்காருகிறோம். அடுத்த காட்சியிலேயே, அப்படியெல்லாம் இல்லை, இம்சை அரசன் மாதிரிதான் இதுவும் என்று பொங்கிய பாலில் பன்னீர் தெளிக்கிறார்கள்.
12»
தேடல் தொடர்பான தகவல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment