கூகுளில் வேலை செய்ய விருப்பமா?
கூகுள் நிறுவனச் சரித்திரத்தில், இந்த 2011 ஆம் ஆண்டில், மிக அதிகமான எண்ணிக்கையில் திறமையானவர்களை வேலைக்கு எடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக, இந் நிறுவனத்தின், பொறியியல் மற்றும் ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் ஆலன் எஸ்டிஸ், தன்னுடைய வலைமனைப் பக்கத்தில் (http://googleblog.blogspot.com/2011/01/helpwantedgooglehiringin2011.HTML) அறிவித்துள்ளார்.
இந்த ஆள் தேடல், பன்னாட்டளவில் நடைபெற இருக்கிறது. பேஸ்புக், ட்விட்டர், ஸிங்கா மற்றும் குரூப் ஆன் போன்ற நிறுவனங்கள், கூகுள் நிறுவனத்திற்குப் போட்டியாக, தங்களைத் தயார் செய்து கொண்டிருப் பதால், அவற்றிற்குச் சரியான பதிலடி தர, கூகுள் தன்னைத் தயார் செய்திடும் முயற்சியே, இந்த புதிய ஆட்களை அதிக எண்ணிக்கையில் எடுக்கும் முடிவாகும்.
சென்ற 2010 ஆம் ஆண்டு வரை, கூகுள் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களின் எண்ணிக்கை 24,000 ஆக இருந்தது.
Tuesday, March 1, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment