Saturday, May 14, 2011
இந்திய, பாகிஸ்தானியப் பெண்கள் மீதான கன்னிப் பரிசோதனை! பிரிட்டிஷ் அரசை மன்னிப்புக் கேட்க வற்புறுத்தல்
1970 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பிரிட்டனுக்கு வருகை தந்த ஆசிய நாட்டுப் பெண்கள் அவர்களின் கன்னித் தன்மைக்காக லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
குறைந்த பட்சம் 80 பெண்களுக்கு இந்தப் பரிசோதனையை மேற் கொள்ளுமாறு குடிவரவு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்திய மற்றும் பாகிஸ்தானிய பெண்கள் திருமணமானவர்களா என்பதை ஊர்ஜிதம் செய்யும் ஒரு வழிமுறையாகவே அவர்களின் கன்னித் தன்மை பரிசோதிக்கப்பட்டது.
35 வயதான ஒரு இந்தியப் பெண்ணுக்கு ஹீத்ரு விமான நிலையத்தில் இந்தப் பரிசோதனை ஒரு ஆண் டொக்டரால் மேற்கொள்ளப் பட்டமைக்கு எதிர்ப்புக்கள் கிளம்பியதை அடுத்து 1979 பெப்ரவரியில் இந்தப் பழக்கம் தடை செய்யப்பட்டது.
இது சம்பந்தமான ஆவணங்கள் இப்போது லண்டனில் உள்ள தேசிய சுவடிகள் கூடத்திலிருந்து அவுஸ்திரேலிய சட்ட நிபுணர்கள் இருவரால் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.
இதில் பெண்கள் எவ்வாறு இவ்வித சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனித உரிமை மீறல் சம்பவங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று புலம்பெயர்ந்தோர் நலனுக்கான கூட்டுக் கவுன்ஸில் உட்பட பல அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
30 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவங்கள் தவறானவை என்று பிரிட்டனின் எல்லைப் பாதுகாப்பு முகவராண்மையின் பேச்சாளர் ஒருவரும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment