Wednesday, December 7, 2011

மருத்துவக் குணங்கள்: <> செம்பருத்தி பூ

மருத்துவக் குணங்கள்:







நமது நாட்டில் செம்பருத்தி எல்லா இடங்களிலும் கிடைக்கும். செம்பருத்தியில் பல வகை உண்டு. செம்பருத்தியை பொறுத்தவரை நிறைய சிறப்பு மருத்துவ குணமும் உண்டு.


அதிகமான பெண்களின் மாத விலக்கை சரி செய்ய ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்தி பூவின் பத்து பூக்களை அரிசி களைந்த தண்ணீரில் கலந்து அரைத்து சர்பத் போலவோ இம்பூரல் செடியின் சாறோடோ சேர்த்து சாப்பிட குணமாகும்.


அடிக்கடி சிறுநீர் கழிப்பதை சரிசெய்ய செம்பருத்தி பட்டையின் சாறை தண்ணீருடன் கலந்து சாப்பிட ஓரிரு நாளில் குணமாகும்.


திடீரென்று ஏற்பட்ட பேதியை நிறுத்த பூவின் இதழ்களை கழனி தண்ணீரில் அரைத்து சாப்பிட உடன் நிற்கும்.


புழுவெட்டை சரிசெய்ய செம்பருத்தி பூவின் இதழோடு வரிக்கமட்டி காயையும் அரைத்து பூச சரியாகும்.


கலப்பின அல்லது ஒட்டு வகை செம்பருத்தி, பல அடுக்கு செம்பருத்திகளையும் பயன்படுத்துவதில்லை.


தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.


மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் அதிக வலி உண்டாகும். மேலும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படும். இவர்கள் செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும்.வெள்ளைப் படுதலால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த வெள்ளைப் படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.


செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.


செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி


செம்பருத்தி பூவில் இருந்து இதழை தனி தனியாக பிரித்து நன்கு கழுவி மிதமான வெயிலில் காய வைக்கவேண்டும் .3 நாட்கள் காயவைத்ததை ஒரு காற்று புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். தேவையின் பொது பயன்படுத்தலாம்.


No comments:

Post a Comment