Friday, May 20, 2011

ரோஜாவின் மருத்துவ குணங்கள்


காதலை சொல்லும் மலர் ரோஜா. இந்த மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்ல மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றன.

முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது. அரேபிய நாடுகளில் வாசனை திரவியங்களுக்காகவும், மருத்துவ பயனுக்காகவும் மிகவும் பயன்படுத்துகிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித்துள்ளது. இத்தகைய ரோஜா மலர்கள் மருத்துவ பயன் உடையவை.

ரோஜாப்பூவின் அழகும், மணமும் மக்களை அதுவும் பெண்களை பெரிதும் கவரும். பொதுவாக ரோஜாப்பூவால் சரும நோய்கள் நீங்கும். ரத்த விருத்தி உண்டாகும். ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள் மலர்கள் நறுமண எண்ணெய் உடையவை. பினைல்எத்தானல், க்ளோ ரோஜினிக் அமிலம், டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற வேதிப்பொருட்கள் ரோஜாமலரில் அடங்கியுள்ளன.

ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை(தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும். குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும், பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும்.

களிம்பு ஏறாத பாத்திரத்தில் ரோஜா இதழ்களை பாத்திரத்திலிட்டு கொதிக்கும் நீரை அதில் விட்டு நன்றாக கிளறி விட்டு அப்படியே மூடி வைத்திருக்க வேண்டும். இப்படி 12 மணி நேரம் மூடி வைத்திருக்க வேண்டும். பிறகு மூடியை திறந்து கைகளை சுத்தம் செய்து கொண்டு இதழ்களை கசக்கி பிழிந்து குழம்பு போல் ஆக்க வேண்டும். பிறகு இந்த நீரை வேறொரு பாத்திரத்திலிட்டு 500 கிராம் சர்க்கரை மற்றும் 200 மில்லி நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும்.

சர்க்கரை பாகு வந்ததும் ஏற்கனவே செய்து வைத்த ரோஜாப் பூ நீரை இதில்விட்டு மறுபடியும் காய்ச்ச வேண்டும். இப்போது பாகு தேன் பதத்திற்கு வந்ததும் மூன்று அவுன்ஸ் அளவுக்குப் பன்னீரை கலந்து கிளறி இறக்கி ஆற வைத்துக் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும். இரண்டு கரண்டி டம்ளரில் விட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு சாப்பிட்டு வரலாம்.

இதனால் ரத்த விருத்தி உண்டாகும். ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.

Saturday, May 14, 2011

இந்திய, பாகிஸ்தானியப் பெண்கள் மீதான கன்னிப் பரிசோதனை! பிரிட்டிஷ் அரசை மன்னிப்புக் கேட்க வற்புறுத்தல்



1970 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பிரிட்டனுக்கு வருகை தந்த ஆசிய நாட்டுப் பெண்கள் அவர்களின் கன்னித் தன்மைக்காக லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குறைந்த பட்சம் 80 பெண்களுக்கு இந்தப் பரிசோதனையை மேற் கொள்ளுமாறு குடிவரவு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்திய மற்றும் பாகிஸ்தானிய பெண்கள் திருமணமானவர்களா என்பதை ஊர்ஜிதம் செய்யும் ஒரு வழிமுறையாகவே அவர்களின் கன்னித் தன்மை பரிசோதிக்கப்பட்டது.

35 வயதான ஒரு இந்தியப் பெண்ணுக்கு ஹீத்ரு விமான நிலையத்தில் இந்தப் பரிசோதனை ஒரு ஆண் டொக்டரால் மேற்கொள்ளப் பட்டமைக்கு எதிர்ப்புக்கள் கிளம்பியதை அடுத்து 1979 பெப்ரவரியில் இந்தப் பழக்கம் தடை செய்யப்பட்டது.

இது சம்பந்தமான ஆவணங்கள் இப்போது லண்டனில் உள்ள தேசிய சுவடிகள் கூடத்திலிருந்து அவுஸ்திரேலிய சட்ட நிபுணர்கள் இருவரால் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.

இதில் பெண்கள் எவ்வாறு இவ்வித சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனித உரிமை மீறல் சம்பவங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று புலம்பெயர்ந்தோர் நலனுக்கான கூட்டுக் கவுன்ஸில் உட்பட பல அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

30 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவங்கள் தவறானவை என்று பிரிட்டனின் எல்லைப் பாதுகாப்பு முகவராண்மையின் பேச்சாளர் ஒருவரும் தெரிவித்துள்ளார்.

Friday, May 6, 2011

[LINK=/index.php?option=com_content&view=article&id=1832:2011-03-23-05-26-57&catid=38:2011-01-07-13-59-19&Itemid=399]குடி தண்ணீரை சுத்தமாக்க வாழைப்பழ


குடிநீரை சுத்தப்படுத்த இனி பியூரிபையர் தேவையில்லை. வாழைப்பழ தோல் போதும். ஆம், குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதன் விவரம்: இன்று குடிநீராக பயன்படும் தண்ணீர், காரீயம், செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் ரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு ரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன் நச்சுத் தன்மை உள்ளதாகவும் இருக்கின்றன. இந்நிலையில், தேங்காய் நார் மற்றும் கடலை தோல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், சில்வர் பாத்திரங்கள் மற்றும் தோல் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழ தோலைக் கொண்டும் தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது, தண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால் போதும், அதில் உள்ள உலோக நச்சுப் பொருட்களை உடனடியாக தன்னகத்தே உறிஞ்சிக் கொள்ளும். எவ்வித ரசாயனப் பொருளையும் சேர்க்கத் தேவையில்லை.

தண்ணீரை சுத்தப்படுத்துவதில் மற்ற முறைகளைவிட இம்முறை சிறப்பானதாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழ தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

[LINK=/index.php?option=com_content&view=article&id=2497:2011-05-05-16-29-58&catid=38:2011-01-07-13-59-19&Itemid=399]கோழி கொழுப்பில் விமான எரிபொருள்!


லாஸ்ஏஞ்சல்ஸ் : பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை ஏறி வருகிறது. அதற்காக கார், பைக் ஓட்டாமல் இருக்க முடியுமா? எவ்வளவு விலை உயர்ந்தாலும் குறையாமல் நடக்கிறது விற்பனை. அதே நேரம்.. ‘பயன்பாட்டை குறையுங்கள், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது’ என்கிறார்கள் ஆர்வலர்கள். மாற்று எரிபொருள் குறித்த ஆய்வும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.



இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் விலங்குகளின் கொழுப்பில் இருந்து சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான விமான எரிபொருள் தயாரித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நாசா ட்ரைடன் விமான ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இதுதொடர்பாக தீவிர ஆய்வு நடத்தியது.

கோழி மற்றும் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பயோ எரிபொரு ளை விமானத்தில் பயன்படுத்தி சோதனை நடத்தியது. முதல் கட்ட சோதனையில் எரிபொருளின் தரம், இயந்திரங்களின் செயல்திறன், பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக எரிபொருளில் உள்ள நச்சுத்தன்மை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரோ கார்பன் சுற் றுச்சூழலில் மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் எரிபொருளில் இதன் அளவு குறித்த கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்த அளவு அதிகரிக்கும் போது எரிபொருள் பயன்பாட்டு அங்கீகாரம் நிராகரிக்கப்படும். இந்த ரசாயனங்கள் காற்றில் கலந்தால் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு, இதய பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக விமானங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடு உடனடி பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை தவிர்க்க ஆரம்ப கட்டத்திலேயே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த பரிசோதனையிலும் கோழி எரிபொருள் வெற்றி பெற்றுள்ளது. இறுதிக்கட்டமாக நிறம், தரப் பரிசோதனைக்கு எரிபொருள் உட்படுத்தப்பட்டது. இதில் 90 சதவீதம் கார்பன் மாசுபாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சல்பேட், ஆர்கானிக் ஏரோசால், உள்ளிட்ட ஜெட் எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை திருப்திகரமாக பூர்த்தி செய்து உள்ளது. இறுதிகட்ட ஒப்புதலுக்கு பிறகு விரைவில் கோழி எரிபொருள் அறிமுகப்படுத்தப்ப டுகிறது.

Thursday, April 21, 2011

Spy satellites watch ancient ruins - USATODAY.com

Spy satellites watch ancient ruins - USATODAY.com

விண்வெளியில் நடக்கும் அதிசய நிகழ்வு


விண்வெளியில் நடக்கும் அதிசய நிகழ்வுகளை அடிக்கடி தனது செயற்கைகோள்கள் உதவியுடன் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் புகைப்படமாக வெளியிட்டு வருகிறது. தற்போது, நாசாவின் சூரியமண்டலத்தை ஆய்வு செய்யும் ஆய்வகமான எஸ்.டி.ஒ. ஒரு அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில், சூரியனின் தென்பகுதியில் சூரிய இழை போன்று கிட்டத்தட்ட 4 இலட்சத்து 35 ஆயிரம் மைல்கள் தூரம் சூரியனை சூழ்ந்து ஒளிகற்றை ஒன்று காணப்படுகிறது.



இந்த தொலைவானது பூமியில் இருந்து நிலவிற்கு உண்டான தூரத்தை விட இரு மடங்கு ஆகும். இது சூரியனை விட அதிக அடர்த்தியான நிறத்தினை கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு சூரியனை ஒரு பாம்பு சூழ்ந்து இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதிக அடர்த்தி கொண்ட சூரிய இழைகளில் வாயுக்கள் உள்ளன.



இது சூரியனின் வெளி வளிமண்டலம் என அழைக்கப்படும் கரோனா என்ற பகுதியில் இருந்து உருவாகிறது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி, இந்த புதிய இழை சூரிய புயலை தோற்றுவிக்கும் பலம் வாய்ந்தது அல்லது அது சூரியனுடனேயே மறுபடியும் ஒன்று சேர்ந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்

பிறவியிலேயே கரு முட்டை உற்பத்தி செய்ய இயலாத பெண்


விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மருத்துவ துறையில் தற்போது அதிசயிக்கதக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. சிறிய உடல் நல குறைபாடுகள் காரணமாக குழந்தை பாக்கியம் இன்றி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் இழந்து சிலர் தவித்து வருகின்றனர். அவர்களின் குறைபாடுகளை நீக்கி குழந்தை பாக்கியம் பெற டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிறவியிலேயே கரு முட்டை உற்பத்தி செய்ய இயலாத பெண், குழந்தை பெற்று சாதனை படைத்து இருக்கிறார். அவரது பெயர் காரின் திரியாட் (39). பிரான்ஸ் தலைநகர் பாரீசை சேர்ந்தவர். இவரும் ஸ்டீபெய்னி என்பவரும் இரட்டையர்கள், இருவருக்கும் திருமணம் நடந்தது. அவர்களில் ஸ்டிபெய்னி 2 குழந்தைகளை பெற்றெடுத்தார். திரியாட்டுக்கு குழந்தை இல்லை. டாக்டரிடம் பரிசோதித்த போது இவருக்கு கரு முட்டை உற்பத்தியாக வில்லை என தெரிய வந்தது. குரோசோம்களின் வளர்ச்சியின்மை காரணமாக இது போன்ற குறைபாடுகள் 2500 பெண்களில் யாராவது ஒருவருக்கு ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, அவருக்கு கரு முட்டை தானம் மூலம் குழந்தை பெற செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவருடன் இரட்டையராக பிறந்த ஸ்டிபெய்னிடம் இருந்து கருமுட்டை தானம் பெற்று அவரது கருப்பையில் வைத்தார். அதை தொடர்ந்து அவருக்கு முறைப்படி மாதவிலக்கு ஏற்பட்டு அவர் கர்ப்பம் அடைந்தார். இதை தொடர்ந்து சரியாக 10-வது மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் அவர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு விக்டோரியா என பெயரிட்டுள்ளனர்.

தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். இந்த சிகிச்சையை பெல்ஜியம் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜேக்குவல் டோன்னெஷ் அளித்தார். ஐரோப்பா கண்டத்தில் கரு முட்டை தானம் மூலம் குழந்தை பெற்ற முதல் பெண் திரியாட்தான் என அவர் பெருமையுடன் தெரிவித்தார். மேலும் அவரது குழந்தை விக்டோரியாவுக்கு கரு முட்டை உற்பத்தியாவதில் எந்த கோளாறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.